தமிழில் மட்டுமே நடித்து வந்த ஆர்யா பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தற்சமயம் தமிழுடன் தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் குணசேகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தில் நெகடிவ் கேரக்ட‌‌ரில் நடிக்க ஆர்யா தனது சம்மதத்தை தெ‌ரிவித்துள்ளார். (இது குறித்து அதிகார‌ப்பூர்வமாக அவர் இன்னும் அறிவிக்கவில்லை). மலையாளத்தில் ரோஷன் ஆண்டரூஸ் இயக்கும் காஸனோவா படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் நடித்துக் கொண்டே காஸனோவாவிலும் அவ்வப்போது நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு பல்கலைக்கழக மாணவர் வேடம்.

தமிழ் நடிகைகள் மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் நடிகர்கள் மலையாளப் படங்களில் நடிப்பது குறைவாகவே இருந்து வந்துள்ளது. தமிழில் அதுவும் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஆர்யா எப்படி நடந்து கொள்வார் என்ற பதற்றம் ரோஷன் ஆண்ட்ரூஸ் உள்பட மொத்த காஸனோவா டீமுக்கும் இருந்தது.

அவர்கள் பயந்ததற்கு மாறாக பந்தா இல்லாமல் அனைவ‌ரிடமும் கலகலப்பாக பழகி ஆச்ச‌ரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஆர்யா. பந்தா இல்லாத பழக எளிமையானவர் என மலையாளப் படவுலகம் ஆர்யாவை கொண்டாடுகிறது

Source: http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0903/19/1090319060_1.htm

3/27/2009 10:33:10 pm

Hey ... saw ''naan kadavul''nice attempt to establish as an character artist... however, the writer and director both of them ruined the story... it reminds me of ''slum dog millionaire''

ReplyLeave a Reply.